எட்டாவது யொவுன்புரய நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 300 இளைஞர் யுவதிகள்.

எட்டாவது யொவுன்புரய நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 300 இளைஞர் யுவதிகள்.

 இலங்கையினுடைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இளைஞர்களுக்கு புதுமையான அனுபவ பகிர்வுகளை ஏற்படுத்தும் தேசிய நிகழ்வான எட்டாவது யொவுன்புரய நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பதிநான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் 300 இளைஞர் யுவதிகள் 20 அதிகாரிகள்  பங்குபற்றியுள்ளனர்.


கெளரவ பிரதமரின் தேசிய கொள்கை   மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் சிந்தனை வழிகாட்டலின் கீழ் செயற்படுகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் எட்டாவது தடைவையாக இந்த பாரிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எதிர் காலம் உதயமாகிவிட்டது எனும் கருப்பொருளில் நடைபெறும் இந்த வேலைத்திட்டத்தில் விளையாட்டு பொருளாதார, கலை கலாச்சார , தொழிற்பயிற்சி வேலைத்திட்டங்கள் போட்டி நிகழ்வுகளாகவும் கருத்தரங்குகளாகவும் கண்காட்சியாகவும் இடம்பெறவுள்ளது.

இனமத மொழி பேதமின்றி ஆறாயிரம் இளைஞர்யுவதிகள் பங்குபற்றும் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 02.04.2017 ஞாயிற்றுக்கிழமை நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.