மட்டக்களப்பு யொவுன்புரய பூமிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் விஜயம்.

மட்டக்களப்பு யொவுன்புரய பூமிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் விஜயம்.

நேற்று திருகோணமலை மெக்ஹெய்ஷர் விளையாட்டு திடலில் ஆரம்பமான எட்டாவது யொவுன்புரய நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமது அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்யுவதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கொன ஒதுக்கப்பட்ட பகுதிக்கு விஜயம் செய்து இளைஞர்களின் தேவைகள் தொடர்பாக நட்புறவுடன் கலந்துரையாடினார். இளைஞர்களின் கேள்விகளுக்கும் பதில் வழங்கியதுடன், இளைஞர்களின் கோரிக்கைக்கு அமைவாக ரூபா ஒரு இலட்சம் நிதியினை யொவுன்புரய வேலைத்திட்டத்தில் பங்குபற்றிய இளைஞர்களின் அத்தியாவசிய தேவைக்காக வழங்குவதாகவும் வாக்குறுதியளித்தார்.

இந்த முகாம் காலத்தில் இளைஞர்கள் தங்களது தங்குமிடங்களை தாமே அமைத்துக்கொண்டு தமக்கு தேவையான உணவு முதலிய வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

எதிர்காலம் தொடங்கிவிட்டது எனும் கருப்பொருளில் நடைபெறும் இந்த வேலைத்திட்டத்தில் இளைஞர்களிடத்தே ஒற்றுமை ஒத்துழைப்பு நட்பு மற்றும் அபிவிருத்தி ஆகிய இலக்கினை கட்டியெழுப்புவது பிரதான நோக்கமாக உள்ளது.

 திருகோணமலையில் நடைபெறும் இந்த தேசிய வேலைத்திட்டத்தில் 6000 இளைஞர் யுவதிகள் பங்குபற்றுவதுடன் வெளிநாட்டு இளைஞர் யுவதிகளும் கனிசமானளவில் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது .