மைலம்பாவெளி ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய வசந்த நவராத்திரி பெருவிழா விஞ்ஞாபனம் (வீடியோ இணைப்பு)


(லியோன்)

மட்டக்களப்பு மைலம்பாவெளி அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த வசந்த நவராத்திரி பெருவிழா விஞ்ஞாபனம்  விசேட விநாயகர் பூஜை வழிபாடுகளுடன்  ஆரம்பமானது .   


இலங்கையில் ஒரேயொரு காமாட்சி அம்மன் ஆலயமாக விளங்கும் மட்டக்களப்பு மைலம்பாவெளி அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த  வசந்த நவராத்திரி பெருவிழா விஞ்ஞாபனம்  (28) செவ்வாய்கிழமை  காலை விசேட விநாயகர் பூஜை வழிபாடுகளுடன் உற்சவ கால பூஜைகள் ஆரம்பமானது .   

ஆலய பிரதம பிரதமகுரு லிங்கேஸ்வர குருக்கள் தலைமையில்  வசந்த நவராத்திரி பெருவிழா விசேட யாக கிரிகைகளுடன் சங்காபிஷேக பூஜைகள் நடாத்தப்பட்டது.

பூஜையினை தொடர்ந்து பிரதான கும்பம் மற்றும் பரிபால மூர்த்திகளின் கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு அம்பாளுக்கு  அபிசேகம் செய்யப்பட்டது

இதனை தொடர்ந்து அம்பாளுக்கு அபிசேம், தீபாராதனைகள்  நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட அம்பாளின் ரதம் உள்வீதி  வலம்வருதல் சிறப்பாக நடைபெற்றது.


நடைபெற்ற வசந்த நவராத்திரி பெருவிழா உற்சவத்தில் அடியார்கள் சூழ வேத, நாத, மேளங்களுடன் கோலாகலமாக இடம்பெற்றது .


இந்த வசந்த நவராத்திரி பெருவிழா எதிர்வரும் 6 ஆம் திகதி தீர்த்த உற்சவத்துடன்  நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .