வவுணதீவில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு.

கெளரவ பிரதமரின்
கொள்கைத் திட்டமிடல் மற்றும் பொருளாதார
நடவடிக்கை அமைச்சின் பத்துலட்சம் தொழில்
வாய்ப்புக்களை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ்
மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள்
மன்றம் அதன்  நிஸ்கோ கூட்டுறவு சங்கத்தின்
ஏற்பாட்டில் இளைஞர் யுவதிகளுக்கான சிறு கைத்தொழில்களை முன்னெடுப்பதற்க்கான ஊக்குவிப்பு பயிற்சி செயலமர்வு   கடந்த
21.03.2017 தொடக்கம் 24.03.2017 வரை நான்கு நாட்கள் நடை பெற்றுள்ளது.

நான்கு நாட்கள் தொடர்ச்சியாக வதிவிடமாக வவுணதீவு துர்க்கா மகளீர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற இச் செயலமர்வில் மண்முனை மேற்கு வவுணதீவு, கோறளைப்பற்று மேற்கு கிரான், வாழைச்சேனை
 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த
இளைஞர் யுவதிகள்
கலந்து கொண்டனர்.

சுயதொழில் ஒன்றினை மேற்கொள்வதற்கான
அடிப்படை பயிற்சி மற்றும் திட்டமிடல் வங்கி கடன்
பெறுவது தொடர்பாக விரிவுரை மற்றும்
சொயற்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட நிஸ்கோ கூட்டுறவுச்சங்கத்தின்
பொது முகாமையாளர் திரு ப.கிருபைராசா ,
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிஸ்கோ
கூட்டுறவுச்சங்க உத்தியோகஷ்தர் திரு
எஸ்.பாலசுப்ரமணியம் ஆகியோர் வளவாளர்களாக
கலந்துகொண்டனர்.


பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு இம்மாத
இறுதியில் திருகோணமலையில் நடைபெறவுள்ள
7வது யொவுன்புரய நிகழ்வின் போது 250000.00
நிதி கடனாக வழங்கப்படவுள்ளதுடன் இந்த நிதியில்
50000.00 ரூபா மானியமாகவும் மீதி இரண்டு இலட்சம்
மிகக்குறைந்த இலகு தவனை வட்டிக்கடனாக
அறவிடப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.