நல்லாட்சியின் இன ஜயக்கியத்துக்கான ஓர் முன்னெடுப்பாக முனைப்பு ஸ்ரீலங்கா நிறுவனத்தாரின் செயற்பாடுகள்.

(சசி துறையூர்)

கடந்த 2016ம் வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில்  மாவட்ட மாகாண ரீதியில் அதிதிறமைச்சித்தி பெற்று சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும் கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கலும் சிறப்பு பட்டிமன்றமும் கடந்த 25.03.2017 சனிக்கிழமை மட்டக்களப்பு நாவற்காடு இந்து கலாச்சார நிலையத்தில் கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில்  முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மணிக்கப்போடி சசிகுமார் தலைமையில் இடம் பெற்றது. 


இந்த நிகழ்வில் அம்பாறை , மற்றும்
மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் திறமைச் சித்தி பெற்று  சாதனை படைத்த தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் பரிசில்களும் வழங்கப்பட்டன.

அரசியல் மற்றும் இன பேதமின்றி நடைபெற்ற இந் நிகழ்வானது இன ஜக்கியத்துக்கான நல்ல வெளிப்பாடு எனவும் முனைப்பு ஸ்ரீலங்கா நிறுவனத்தின் செயற்பாடு பாராட்டுதலுக்குரியது என அதிதிகளால் பாராட்டி பேசப்பட்டது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண மேலதிக கல்விப்
பணிப்பாளர் எஸ்.மனோகரன், மண்முனை வடக்கு, கோறளைப்பற்று மேற்கு, காத்தன்குடி, மண்முனைப்பற்று கோட்டக்கல்விப்
பணிப்பாளர்கள், முனைப்பு சுவிஸ் அமைப்பின்
தலைவர் மா.குமாரசாமி, அமைப்புக்களின்
பிரதிநிதிகள், முனைப்பு நிறுவனத்தின்
ஆலோசகர், பாடசாலைகளின் அதிபர்கள்,
மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.