மாதர் அபிவிருத்தி பயிற்சியாளர்களின் தையல் கண்காட்சியும் ,விற்பனையும்

(லியோன்)

மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் மாதர் அபிவிருத்தி தையல் பயிற்சியாளர்களின் பொருட்களின் கண்காட்சியும் ,விற்பனையும்  (03) வெள்ளிக்கிழமை  நடைபெற்றது .


மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களம் ஆண்டு தோறும் படித்துவிட்டு  வேலையற்று இருக்கின்ற யுவதிகளுக்கு ஒருவருட டிப்ளோமா பயிற்சி நெறியினை வழங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றது . 

அந்த வகையில் 2016ஆம் ஆண்டு பயிற்சி நெறிகளை  நிறைவு செய்துகொண்டு  வெளியேறும் யுவதிகளின் திறமைகளை வெளிகாட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட  பொருட்களின்  கண்காட்சியும் , விற்பனையும் மட்டக்களப்பு   இருதயபுரம் கிழக்கு  மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலகத்தில்  நடைபெற்றது .

மண்முனை வடக்கு தையல் பயிற்சிகளுக்கான போதனாசிரியை  திருமதி நந்தினி ஒழுங்கமைப்பில் ,மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி .மாலதி மகேஸ்வரன் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில்  மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ் .யோகராஜா  பிரதம அதிதியாக கலந்துகொண்டு நாடா வெட்டி நிகழ்வினை  ஆரம்பித்து வைத்தார் .

இந்நிகழ்வில்  மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்  கே .மோகன் பிறேம்குமார்  மண்முனை வடக்கு பிரதேச செயலக  கிராம சேவை  நிர்வாக உத்தியோகத்தர்   எஸ் .தில்லைநாதன் ,கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி . எஸ் . ஜெகதர்சன் மற்றும் ஜெயந்திபுரம் , கருவேப்பங்கேணி , பாரதிபுரம் , மட்டிக்களி , புன்னைச்சோலை ஆகிய கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்  , மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பயிற்சிகளை நிறைவு செய்த யுவதிகளும் கலந்துகொண்டனர் .












  .