கழிவுகளை சுத்திகரிக்கும் இயந்திரத்தின் பயன்பாட்டினால் சூழலுக்கு பாதிப்பு இல்லை வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார். (வீடியோ இணைப்பு)

 (லியோன்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பெறப்படும் தொற்றுநோய் உள்ள வைத்தியசாலை கழிவுகளை சுத்திகரிக்கும் இயந்திரத்தின் பயன்பாட்டினால் சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம் .எஸ் .இப்ரா லெப்பை தெரிவித்தார்.


திராய்மடுவில் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலை கழிவுகளை சுத்திகரிக்கும் நிலையத்தின் பணிகள் (06) திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த நிலையத்திற்கு எதிராக குறித்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டங்களை கடந்த காலங்களில் நடாத்திய நிலையில் அது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் அப்பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம் .எஸ் .இப்ரா லெப்பை நிலையத்தின் பணிகளை ஆரம்பித்துவைத்ததுடன் தெளிவுபடுத்தலையும் மேற்கொண்டார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் மற்றும் தொற்றுநோய் அதிகமுள்ள கழிவுகளை இந்த நிலையம் ஊடாக நீராவி மூலம் தொற்றுநோய் அழிக்கப்பட்டு சாதாரண கழிவுகளாக தரம்பிரிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதனா  வைத்தியசாலை பணிப்பாளர் ,அவுஸ்ரேலியாவினால் வழங்கப்பட்டுள்ள இந்த இயந்திரம் மூலம் 1200 செல்சியஸ் வரையில் தொழில்பட்டு நீராவியின் மூலம் கழிவுகளில் உள்ள கிருமிகள் எல்லாம் அழிக்கப்பட்டு கழிவுகள் இழையிழையாக பிரிக்கப்பட்டு சாதாரண கழிவாக மாற்றி வழங்குகின்றது.

இந்த பொறிமுறை மூலம் நூற்றுக்கு நூறுவீதம் தொற்று கிருமிகள் அழிக்கப்பட்டு கடதாசி போன்ற சாதாரண கழிவாக மாற்றப்படுகின்றது.

சில சமூக விரோத விசமிகளினால் திராய்மடு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தூண்டப்பட்டு இந்த நிலையத்திற்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என தெரிவித்தார்.