36வது நாளாக தொடரும் போராட்டம் -கறுப்புக்கொடி கட்டி எதிர்ப்பு

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை கறுப்புகொடிகளை கட்டி தமது சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

36வது நாளாகவும் போராட்டம் மேற்கொண்டுவரும் வேலையற்ற பட்டதாரிகள் ஓயாத அலைகள் என்ற பெயரை சூட்டி தமது போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

தமது நியாயமான கோரிக்கைகளை மத்திய மாகாண அரசாங்கங்கள் புறக்கணித்துவருவதன் காரணமாக இன்று மட்டக்களப்பு வெள்ளைப்பாலத்தில் கறுப்புக்கொடியை கட்டி தமது எதிர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

எமது அரசியல்வாதிகள் வாய்ப்பேச்சு வீரர்களாகவே உள்ளதாகவும் தமது போராட்டம் தொடர்பில் அரசாங்கத்திற்கு எந்த அழுத்தத்தினையும் வழங்கவில்லையெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்வி கற்றவர்கள் இன்று வீதியில் இருந்துபோராடிவருவது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த நிலையினைக்கொண்டுசெல்லாது என்பதை அரசாங்கமும் அரசியல்வாதிகளும் உணர்ந்துகொள்ளவேண்டும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எமது பிரச்சினைக்கு எந்த தீர்வினையும் பெற்றுத்தராமுடியாவிட்டால் தமது பதவிகளை தூக்கியெறிந்துவிட்டு வீதியில் இறங்கிப்போராடமுன்வரவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.