இருதயபுரம் மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் தையல் பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டது

(லியோன்)

தையல் பயிற்சி நிலையம் மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு  கிராம சேவையாளர் பிரிவில் இன்று (18) திறந்து வைக்கப்பட்டது .


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக அனுசரணையில் மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஒழுங்கமைப்பில் இருதயபுரம் மேற்கு  கிராம சேவையாளர் பிரிவில்  அமைக்கப்பட்டுள்ள தையல் பயிற்சி நிலையத்தினை  கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம் .எஸ் .எஸ் அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார் .

 இந்த தையல் பயிற்சியின்  ஊடாக  இருதயபுரம் மேற்கு கிராமத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தையும் தொழில் வாய்ப்பினையும்  மேம்படுத்தும் நோக்காக கொண்டு  இந்த தையல் பயிற்சி திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கான தையல் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது .   
   .
இந்த நிகழ்வில் கிராமிய பொருளாதார அமைச்சின் மாவட்ட இனைப்பாளர் லோகநாதன் (ஜோன் பாஸ்டர் )  கிராமிய பொருளாதார அமைச்சின் மகளிர் ஒருங்கிணைப்பாளர் திருமதி .ஜெகதீஸ்வரன் , இருதயபுரம் மேற்கு கிராம அபிவிருத்தி சங்க செயலாளர்  டி .தேவராஜா, இருதயபுரம் மேற்கு ஸ்ரீ பாலமுருகன் ஆலய தலைவர் ஆர் . ராஜீ , கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ,பயனாளிகள் ,பொதுமக்கள்   உட்பட பலர் கலந்துகொண்டனர் .