கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏழு புத்தகங்கள் வெளியிட்டு சாதனை

கிழக்கு மாகாணத்தின் கலைத்துறை வரலாற்றில் முதன்முறையாக மாகாணபண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஓரே மேடையில் ஓரு நிகழ்வில் ஏழு நூல்கள் வெளியிட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுலல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஏழு நூல்கள் வெளியீடும் கிழக்கு மாகாணத்தில் உள்ள கலை மன்றங்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்வில் வடகிழக்கு மாகாண பண்பாட்டலுல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் எதிர்மன்னசிங்கம் உட்பட விரிவுரையாளர்கள்,கலாசார திணைக்களத்தின் பிரதேச உத்தியோகத்தர்கள் கலைஞர்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுல்கள் திணைக்களத்தினால் எழுத்தாளர்களின் கையெழுத்து பிரதிகளில் ,இருந்து தெரிவு செய்து நூலுருவாக்கம் செய்யப்பட்ட. சுவனத்து மலர்கள்.

உணர்வுச்சோலை. சுவடுகள், தமிழ் மருத்துவ ஓலைச்சுவடிகளை தேடிய பயணம், ஒரு திராட்சைக்கொடி தேம்பி அழுகின்றது ஆகிய 07 நூல்கள் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டன.

இதன்போது கிழக்கு மாகாண  ஆளுனரின் விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் கொள்வனவுசெய்யப்பட்ட இசைகருவிகள் உட்பட உபகரணங்கள் மற்றும் சீருடைகள் கலை மன்றங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

கிழக்கு மாகாணத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 09 கலை மன்றங்களுக்கு இந்த உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.