முறக்கொட்டாஞ்சேனை புதைகுழி தோண்டும் பணிகள் இடை நிறுத்தம் - 20ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அண்மித்த பகுதியிலுள்ள தனியார் குடியிருப்புக் காணிக்குள் மனித எச்சங்கள் காணப்படும் புதை குழிக்குரிய அகழ்வு திகதி எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி, மட்டக்களப்பு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வி.சி.எஸ்.பெரேரா, சிரேஸ்ட வைத்திய நிபுணர் எம்.சிவசுப்பிரமணியம், மாத்தளை சட்ட வைத்திய நிபுணர் டி.ஐ. வைத்தியரெட்ண, புவி சரிதவியல் அதிகாரி ஜே.ஏ.ரி.வி.பிரியந்த, கண்டி மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி அசித்த கீர்த்தி ஆகியோர் இன்றைய தினம் (02) குறித்த இடத்தை பார்வையிட்டனர்.

இதன் போதே அகழ்வுப் பணிகளை பிற்போட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த புதை குழியில் இன்றைய தினம் அகழ்வு வேலைகள் ஆரம்பிக்கப்படும் என வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்தபோதும் அதற்கான திகதி பிற்போடப்பட்டுள்ளது.கடந்த வருடம் (2016.10.30) ஆம் திகதி முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த வான்மதி உதயகுமார் என்ற நபரின் தனியார் காணிக்குள் மலசல கூடம் கட்டுவதற்குரிய குழி வெட்டும்போது ஒரு வித எழும்புத் துண்டங்கள் குழியில் இருந்து வெளிக்கிளம்பியதையடுத்து குறித்த விடயம் தொடர்பாக ஏறாவூர் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

கடந்த வருடம் (2016.10.30) ஆம் திகதி முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த வான்மதி உதயகுமார் என்ற நபரின் தனியார் காணிக்குள் மலசல கூடம் கட்டுவதற்குரிய குழி வெட்டும்போது ஒரு வித எழும்புத் துண்டங்கள் குழியில் இருந்து வெளிக்கிளம்பியதையடுத்து குறித்த விடயம் தொடர்பாக ஏறாவூர் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.