திவா கோம் டிசைனர் மற்றும் பில்டர் நிறுவனத்தின் கட்டிட பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே கூரையின் கீழ் கட்டிட நிர்மாண சேவைகளை வழங்கிவரும் திவா கோம் டிசைனர் மற்றும் பில்டர் நிறுவனத்தில் கடமையாற்றுவோரில் தொழில் ரீதியான பயிற்சினை பூர்த்திசெய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00மணியளவில் இருதயபுரம்,கொன்பர்ட் மண்டபத்தில் இந்த நிகழ்வு திவா கோம் டிசைனர் மற்றும் பில்டர் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.திவாகர் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.அருமைநாயகம்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதுடன் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன்,மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

கடந்த 15வருடமாக மட்டக்களப்பு நகரில் கட்டிட நிர்மாணத்துறையில் தனக்கென தனித்துவத்துடன் கட்டிடத்துறைக்கு தேவையான அனைத்து மனித வளங்கள் உட்பட அனைத்து வளங்களையும் கொண்டு திவா கோம் டிசைனர் மற்றும் பில்டர் நிறுவனம் இயங்கிவருகின்றது.

குறித்த நிறுவனத்தில் பணிக்கென இணையும் அனைத்து பணியாளர்களுக்கும் தொழில்ரீதியான முறையான பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் பயிற்சினை பூர்த்திசெய்தவர்களுக்கு நிறுவனத்தினால் தொழில் தகைமை சான்றிதல்களும் வழங்கப்பட்டுவருகின்றன.

இதன் கீழ் பயிற்சினை பூர்த்திசெய்தவர்களுக்கான சான்றிதழ்களே வழங்கப்படவுள்ளதாகவும் குறித்த சான்றிதழுடன் வேறு இடங்களுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும்போது சிறந்த தொழில்களை பெற்றுக்கொளள்முடியும் என திவா கோம் டிசைனர் மற்றும் பில்டர் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.திவாகர் தெரிவித்தார்.