மட்டக்களப்பு உயர் தொழில் நுட்பவியல் நிறுவனத்தில் சர்வதேச பயிற்சிப்பட்டறை

இணையத்தில் தமிழ் மொழிபயன்பாடு சர்வதேச பயிற்சிப்பட்டறை மட்டக்களப்பில் அண்மையில்; சிறப்பான முறையில் நடைபெற்றது.

கிழக்குமாகாணக்கல்விஅமைச்சு, உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்பமன்றம் மற்றும் மட்டக்களப்பு உயர் தொழில் நுட்பவியல் நிறுவனமும் இணைந்து நாடாத்தும்இரு அமார்வுகளாக மட்டக்களப்பு கோவில் குளத்திலுள்ள உயர்தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு உயர்தொழில் நுட்பவியல் நிறுவனத்தின் கல்விசார் இணைப்பாளர் செல்வரெத்தினம் ஜெயபாலன் தலைமையில் நடைபெறும் இப்பயிற்சிப்பட்டறைக்கு முதன்மை அதிதியாக மட்டக்களப்பு மாவட்டச்செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதிகளாக அமெரிக்காவிலிருந்து தமிழ் இணையத்துறை முன்னோடி உத்தமம் நிறவனத்தின் உபதலைவர் சுகந்தி நாடார், இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.நசீர் ஆகியோரும் விசேடஅதிதிகளாக திருகோணமலை மற்றும் உயர் தொழில்நுட்பக்கல்வி நிறுவக பணிப்பாளர் ஜெ.பிரதீபன், மட்டக்களப்பு அரிமா சங்கத்தின் தலைவர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தகவல் தெரிவு செய்யப்பட்ட தகவல்தொழில்நுட்பத்தில் மிகந்த ஈடுபாடுள்ள மாணவர்களும் கல்வி வலயங்களில் தகவல் தொழில் நுட்பத்தினை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சோர்ந் கணிணி விற்பனர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் பல்வேறுபட்ட தலைப்புக்களில் பயிற்சிப்பட்டறைகள் நடைபெற்றன.

இதற்கான பிரதான அனுசரணையினை மட்டக்களப்பு அரிமாக் கழகம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் வேண்டுதலின் பெயரில் மட்டக்களப்புஉயர் தொழில்நுட்ப நிறுவக நிருவாகத்தினர் மற்றும் விரிவுரையாளர்கள் மாணவர்கள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.