மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு மாவட்ட தொழிற் பயிற்சி நிலையத்தில் புதிய பயிலுணர்களை இணைத்துக் கொள்வதற்க்கான ஆரம்ப நிகழ்வு இன்று.

(சசி துறையூர்)
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு  புதுக்குடியிருப்பு பயிற்சி நிலையத்தில் 2017 ம் வருடத்திற்கான பயிற்சி நெறிகளுக்கு புதிய  பயிலுணர்களை இணைத்துக் கொள்வதற்கான   ஆரம்ப நிகழ்வு நிலையப் பொறுப்பதிகாரி ந.குகதாஸ் அவர்களின் தலைமையில் இன்று 04.01.2016 புதன் கிழமை  பயிற்சி நிலையத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

 இந்   நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண நிருவாக உத்தியோகஸ்தர் திரு கே.தியாகராஜா,    மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்  உதவிப்பணிப்பாளர் ஜனாப் A.ஹமீர் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திருமதி ஜேசுதாஸன் கலாராணி, நிஷாந்தி அருள்மொழி, தகவல் நிலைய உத்தியோகஸ்தர் திரு ரி.மகேந்திரராஜா, மண்முனைப்பற்று பிரதேச இளைஞர் சேவை அலுவலர் வி.தருமரெட்ணம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.


 கணணிப்பிரயோக உதவியாளர், தையல், அழகுக்கலை, கட்டிடக்கலை (மேசன்) போன்ற முழு நேர பயிற்சிகளும் பகுதி நேர பாடநெறிகளாக ஆங்கில சிங்கள மொழி பயிற்சி நெறிகளும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

சுமார் 120 மாணவர்கள் பயிற்சி நெறிகளை தொடர்வதற்க்காக இணைத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.