பேண்தகு பாடசாலை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்

(லியோன்)


பேண்தகு பாடசாலை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ்  பாடசாலை மாணவர்களின்  போசாக்கு , சுகாதாரம் ,சிறுவர் உரிமைகள் ,பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன



இதற்கு அமைய கிழக்கு  மாகாண கல்வி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக வலயமட்டத்தில் தெரிவு செய்யப்பட பாடசாலைகளில் இந்த நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது .


இதன்கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் பணிப்புரையின்   மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் மாணவர்களின்  போசாக்கு , சுகாதாரம் ,சிறுவர் உரிமைகள் ,பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சிரமதான பணிகளும் ,மரக்கன்று நடுகை நிகழ்வு  முன்னெடுக்கப்பட்டது .



இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய கல்வி அபிவிருத்தி (அலுவலகம்) திருமதி .கங்கேஸ்வரன் , மட்டக்களப்பு கல்வி வலய நிருவாக பிரதி கல்விப்பணிப்பாளர்  பி . கோவிந்தராஜா,பாடசாலை  பிரதி அதிபர் பகிரதன் ஆசிரியர்கள் , மாணவர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர் , சமுர்த்தி உத்தியோகத்தர் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் , பொதுசுகாதார பரிசோதகர் , பழைய மாணவர்கள் , பெற்றோர்கள் ,  என பலர் கலந்து கொண்டனர் .