தமிழர்களின் பாரம்பரியங்கள் பாடசாலைகள் ஊடாக பாதுகாக்கப்படவேண்டும் -பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளர்

தமிழர்களின் பாரம்பரியங்களையும் கலாசாரங்களையும் பாடசாலைகள் ஊடாக எதிர்கால சந்ததியினருக்கு கொண்டுசெல்லும் வகையில் பட்டிருப்பு வலயம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தின் போரதீவுப் பற்றுக் கோட்ட காலசார மைய பொங்கல் விழா இன்று மூவின ஆசிரியர்கள், மாணவர்களின் பங்குபற்றுதலுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இனங்களிடையே சகவாழ்வினையும் சமூக ஒற்றுமையினை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றது.

கடந்த கால யுத்ததினால் பாதிக்கப்பட்ட நூறு வீதம் தமிழ் மாணவர்களைக்கொண்ட போரதீவுப்பற்று கல்விக்கோட்டத்தில் மூவினங்களையும் சேர்ந்த மாணவர்கள் இந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.

போரதீவு பற்று  கோட்டக் கல்வி அதிகாரி பூ.பாலச்சந்திரன் தலைமையில் வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய கலையரங்கில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம்;, விஷேட அதிதிகளாக பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான எஸ்.ஞானராசா, செல்வி.கே.ஜெயந்திமாலா, மற்றும் வலயக் கணக்காளர் செல்வி.எஸ்.புஸ்பகாந்தி பாடசாலை வேலைகள் பரிசோதகர் ரீ.இராசநாயகம், மற்றும் மஃமூத்பாலிகா அதிபர் ஜனாப்.எஸ்.ஏ.சியாகத்அலி, அம்பாரை ரிதிகலதென்ன கல்லூரி அதிபர்.டீ.எம்.டீ.எஸ்.திசாநாயக்க, அம்பாரை கொத்மல வித்தியாலய அதிபர்.எம்.ஆர்.ரவீந்திரா,வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,மற்றும் போரதீவுப்பற்றுக் கோட்ட அதிபர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இப் பொங்கல் விழாவில் பங்கு கொள்வதற்காக கல்முனை கல்வி வலயத்தில் இருந்து மஃமூத்பாலிகா முஸ்லிம் பெண்கள் பாடசாலை, அம்பாரை வலயத்தில் இருந்து கொத்மல வித்தியாலயம், ரிதிகலதென்ன கல்லூரி ஆகிய மூவின பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்களினால் மூவினத்தையும் பிரதிபலிக்கும் கலாசார நிகழ்ச்சிகள் நிகழ்த்திக்காட்டப்பட்டது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய வலய கல்விப்பணிப்பாளர்,

பாடசாலைகளில் கலைகலாசரங்கள் பண்பாடுகள் மறைக்கப்படுமானால் அவை எதிர்கால சந்ததிக்கு மறைக்கப்பட்ட நிலையே ஏற்படும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.