மட்டக்களப்பு சென்றலைட் 25வது பூர்த்தி நிகழ்வு – அதிர்ச்சி கொடுத்த சனத் ஜயசூரிய

மட்டக்களப்பு சென்றலைட் விளையாட்டுக்கழகத்தின் 25வது ஆண்டுநிறைவினையொட்டிய நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த சனத் ஜெயசூரியவுக்கு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

இதன்போது பாடசாலைக்கு சென்று பாடசாலையில் மேற்கொள்ளப்படும் விளையாட்டு செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் சென்றலைட் விளையாட்டுக்கழகத்தின் 25வது ஆண்டுநிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது.

சென்றலைட் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் வை.கோபிநாத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை கிரிக்கட் தேர்வுக்குழுவின் தலைவரும் முன்னாள் கிரிக்கட் வீரருமான சனத் ஜயசூரிய பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார்,மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட மெதடிஸ்த மத்திய கல்லூரி பாடசாலையின் அதிபர் பி.விமல்ராஜ்,பழைய மாணவர்கள்,சென்றலைட் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் முதல் பாடசாலையென்ற பெருமையினைக்கொண்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் விளையாட்டுத்துறையின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு சென்றலைட் விளையாட்டுக்கழகம் உருவாக்கப்பட்டது.

மட்டக்களப்பின் விளையாட்டுத்துறையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ள மெதடிஸ்த மத்திய கல்லூரி மற்றும் சென்றலைட் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றின் வளர்ச்சியின் 25வது ஆண்டு இன்று கொண்டாடப்பட்டது.

இதன்போது சென்றலைட் விளையாட்டுக்கழகத்தின் 25வது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையிலான நினைவு மலரும் வெளியிட்டுவைக்கப்பட்டது.

இதன்போது விளையாட்டுத்துறையில் பிரகாசித்துவரும் இளம் வீரர்கள் விருதுகள் வழங்கிகௌரவிக்கப்பட்டதுடன் விளையாட்டுத்துறைக்கு அர்ப்பணிப்புகளை செய்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.