மகாத்மா காந்தியின் 69 வது நினைவு தின நிகழ்வுகள்

(லியோன்)

அகிம்சா வழியில் போராடி இந்தியாவிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தியின் 69 வது நினைவு தினம் இன்றாகும்.




இதனை  முன்னிட்டு மட்டக்களப்பில் விசேட நினைவு தின நிகழ்வுகள் இன்று (30)   திங்கள்கிழமை   நடைபெற்றன.

மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு  காந்தி பூங்காவில் இடம்பெற்ற நினைவு தின நிகழ்வின் போது அங்கு அமைக்கப்பட்டுள்ள  அடிகளாரின் உருவச்சிலைக்கு  மலர் மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது

மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் அ.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி.தவராஜா, பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன் ,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் கதிர் பாரதிதாசன் ,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை, மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் அபிவிருத்தி மையத்தின் செயலாலாளர் வ .பஞ்சலிங்கம், ஓய்வுநிலை  வடக்குகிழக்கு கலாசார பணிப்பாளர்  எதிர்மனசிங்கம் மற்றும் பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து மட்டக்களப்பு நகர மண்டபத்தில் மகாத்மா காந்தியின் 69 வது நினைவு தினத்தை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபையின்  புதிய  ஆணையாளரை  கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது .
இதன்போது மட்டக்களப்பு காந்தி சேவா சங்கம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் அபிவிருத்தி மையம் இனைந்து மாநகர சபை அலுவலக  உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் 50 பேருக்கு இலவச மூக்குகண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டது .


இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி.தவராஜா, பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன் , காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் கதிர் பாரதிதாசன் ,கிழக்கு  மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் அபிவிருத்தி மையத்தின் செயலாலாளர் வ .பஞ்சலிங்கம், ஓய்வுநிலை  வடக்குகிழக்கு கலாசார பணிப்பாளர்  எதிர்மனசிங்கம் மாநகர சபை அலுவலக உத்தியோகத்தர்கள் , ஊழியர்கள் கலந்துகொண்டனர் .