மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலய நூலகம் திறந்துவைப்பு

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய மாணவர்களைக்கொண்ட மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தில் கிழக்கு லயன்ஸ் கழகத்தின் உதவியுடன் தரமுயர்த்தப்பட்ட நூலகம் இன்று திறந்துவைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் எஸ்.சண்டேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின் மாவட்ட ஆளுனர் லயன் அசேல குணவர்த்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

கடந்தகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குறித்த பாடசாலையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை கருத்தில்கொண்டு லயன்ஸ் கழகத்தினால் இந்த நூலகம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இரண்டாவது ஆளுனர் லயன் நிமால் ரணவக்க,மேலதிக மாவட்ட அமைச்சரை பொருளாளர் லயன் பொறியியலாளர் என்.பி.ரஞ்சன்,அக்கரைப்பற்று லயன்ஸ் கழகத்தின் தலைவர் ஏ.எம்.ஹலீம்,பிராந்திய செயலாளர் லயன் ஜி.முரளிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பாரதி வித்தியாலயத்தில் எதுவித வசதிகளும் இல்லாமல் இயங்கிவந்த நூலகத்திற்கு தளபாடங்கள் உட்பட பெருமளவான நூல்கள் வழங்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

லயன்ஸ் மாவட்ட தலைவர் ரி.ஆதித்தியனின் முயற்சி காரணமாக இந்த நூலகம் அபிவிருத்திசெய்யப்பட்டு தரமுயர்த்தப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தினராலும் பாடசாலை பொதுநூலகத்திற்கு ஒரு தொகை நூல்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வின்போது  லயன்ஸ் மேலதிக மாவட்ட அமைச்சரை பொருளாளரும் மாவட்ட கிரிக்கட்சபையின் தலைவருமான லயன் பொறியியலாளர் என்.பி.ரஞ்சனின் 56வது பிறந்த தினமும் கொண்டாடப்பட்டமை குறிப்பித்தக்கது.