இன்று இனத்தை ,கடந்து ,மதத்தை கடந்து மொழியை கடந்து ஒன்றாகிவிட்டார்கள் .(VIDEO)

(லியோன்)

இன்று மாற்றுத்திரனாளிகள் இனத்தை ,கடந்து ,மதத்தை கடந்து மொழியை கடந்து ,வயதை கடந்து ஒன்றாகிவிட்டார்கள் .
இதேபோல் மற்ற சமுதாயமும் ,நாங்களும் அவர்களை போன்று பேதங்கள் இல்லாமல் இணைவதன் ஊடாக இந்த சமுதாயத்தை கட்டி எழுப்ப முடியும் என மண்முனை  வடக்கு  பிரதேச  செயலாளர்  வி .தவராசா  தெரிவித்தார்



சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் மண்முனை  வடக்கு  பிரதேச  செயலக  சமூக  சேவைகள்  பிரிவினால்    நடத்தப்பட்ட  மாற்றுத்திரனாளிகள்  தின  நிகழ்வும்   “ தடைகளே படிகளாக ‘        எனும் மலர் வெளியீட்டு நிகழ்வும்  மண்முனை  வடக்கு  பிரதேச  செயலாளர்  வி .தவராசா           தலைமையில்  பிரதேச  செயலக  டேபா  மண்டபத்தில்  நடைபெற்றது

இந்நிகழ்வில் உரையாற்றும் போது மண்முனை  வடக்கு  பிரதேச  செயலாளர்  வி .தவராசா  இவ்வாறு தெரிவித்தார் .

மாற்றுத்திரனாளிகள் என்பவர்கள் இன்று சமுதாயத்திலே சமுதாயம் பார்க்கப்பட வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் .

அன்மைகாலத்திற்கு முன்னர்  மாற்றுத்திரனாளிகள்  இந்த சமுதாயம் எங்களை திரும்பி பார்க்காதா என்கின்ற நிலையிலே இருந்தார்கள் . எங்களுடைய அனுதாபத்தை எதிர் பார்த்தார்கள் , சலுகைகளை எதிபார்த்தார்கள்

ஆனால் அந்த நிலை மாறி இன்று சமுதாயமே அவர்களை திரும்பி பார்க்க கூடிய அளவுக்கு அவர்கள் வளர்ந்திருக்கின்றார்கள் ,

இணைந்து இருக்கின்றார்கள் ,திறமைகளை காட்டிக்கொண்டு வருகின்றார்கள் . அவர்கள் இன்று சலுகைகளை எதிர்பார்ப்பதில்லை ,எங்களுடைய அனுதாபங்களை எதிர்பார்ப்பதில்லை , ஆனால் அவர்கள் தங்களுடைய உரிமைகளை எதிபார்கின்றார்கள்

எங்களுடைய உரிமைகளில் அரைவாசியை கேட்கவில்லை ,தங்களுடைய உரிமைகளை கேட்கின்றார்கள் .அந்த அளவுக்கு இன்று முன்னேறி தங்களுடைய வாழ்க்கையை ஒளிமயமாக அவர்களாகவே உருவாக்கி கொண்டிருகின்றார்கள் .

நாங்கள் செய்ய வேண்டியது அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது தான் ,அவர்கள் முன்னேறி செல்கின்ற பொழுது அவர்கள் தோளைத்தட்டி தட்டி கொடுத்தாள் போதும் அவர்கள் சென்றுவிடுவார்கள் . அந்த வகையிலே எங்களுடைய சமுதாயத்தில் மாற்றம் ஏற்படவேண்டும் ,

இவர்கள் இன்று  பல்வேறு துறைகளிலே சர்வதேச ரீதியிலும் தங்களை இனம் காட்டிகொண்டு இருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றுத்திரனாளி மாணவர்கள் இருவர் தேசிய ரீதியில் கிரிகெட் அணியில் இருக்கின்றார்கள் . இவ்வாறு பலர் தங்களுடைய திறமைகளை காட்டக்கூடிய காலமாகவும் அமைந்திருக்கின்றது .

அந்த வகையில்  அவர்களை அவர்களாக வாழ்வதற்கு இடமளியுங்கள் அவர்களை வேற்றுமையாக பார்க்காமல் எங்களைப்போல் அவர்களையும் நேசிக்கின்றவர்களாக மாறவேண்டும் அவ்வாறு மாறுகின்ற பொழுது தான் எந்தவித வேற்றுமையற்ற சமுதாயமாக எங்களுடைய சமுதாயம் மாறும்.

ஏனனில் இன்று மாற்றுத்திரனாளிகள் இனத்தை ,கடந்து ,மதத்தை கடந்து ,மொழியை கடந்து ,வயதை கடந்து ஒன்றாகிவிட்டார்கள் .

இதேபோல் மற்ற சமுதாயமும் ,நாங்களும் அவர்களை போன்று எந்தவித பேதங்கள் இல்லாமல் இணைவதன் ஊடாக இந்த சமுதாயத்தை கட்டி எழுப்ப முடியும் என பிரதேச செயலாளர் தெரிவித்தார் .