தேசிய போக்குவரத்து மட்டக்களப்பு வைத்திய நிறுவகத்துக்கு முன்னாள் தொடரும் மனித அவலம்.

(சசி துறையூர்) போக்குவரத்து சட்ட விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதனை தொடர்ந்து சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான வைத்திய பரிசோதனை அறிக்கை பெற்றுக் கொள்வதற்காக கடந்த இரண்டு மாத காலமாக தினமும் ஆயிரக்கனக்கான இளைஞர் யுவதிகள்  தேசிய போக்குவரத்து மட்டக்களப்பு வைத்திய நிறுவகத்துக்கு முன்னாள் மணிக்கனக்காக காத்திருக்கும் பேரவலம்.


  மட்டக்களப்பு வைத்திய நிறுவகத்துக்கு முன்னாள் தொடர்ச்சியாக அதிகாலையிலிருந்தே அல்லது முதல் நாள் இரவிலிருந்தே ஆயிரக்கனக்கான இளைஞர் யுவதிகள் காத்திருக்க வேண்டிய அவலம் தொடர்கதை ஆகின்றது.

காலையில் அலுவலக நேரத்துக்கு அலுவலகம் திறக்கப்பட்டு அதன் பின்னரே இலக்கம் வழங்கப்பட்டு பரிசோதனை நடைபெற்று அறிக்கை வழங்கப்படும். நண்பகல் வரை உணவின்றி நீர் இன்றி வெயிலோ மழையோ வரிசையில் மணிக்கணக்கில் பரிதாபமாக கால்கடுக்க காத்திருக்க வேண்டும்.

 அது மாத்திரமன்று ஒரு நாளில் சுமார் 100 பேர் வரையிலானவர்களுக்கே பரிசோதனை செய்யமுடியும். ஏனையவர்களின் நிலை??  காத்திருக்கும் ஏனையவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர் அவர்களின் நேரம் பொருளாதாரம் மட்டும் இங்கு இழக்கப்படவில்லை, பாரிய மன உளைச்சலுக்கும் ஆளாகின்றார்கள்.

மிருகங்களை கூட எப்படி பராமரிக்க வேண்டும் ஏற்றி இறக்கவேண்டும் என வரையறைகள் இருக்கின்றன. அதனை சரியாக செய்யவிட்டால் சட்டம் தண்டிக்கும் போது மக்களின் அடிப்படை உரிமையை பாதிக்கும் இந்த மனித அவலத்தை அரசியல்வாதிகள் முதல் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் வரை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்.

உடனடியாக இதற்கான தீர்வு காணப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை.