சிங்கள மக்கள் தமது பாரம்பரிய காணி உரிமையை மட்டக்களப்பில் இழந்துள்ளனர் –நீதியமைச்சர் மட்டக்களப்பில் ஆதங்கம்

பௌத்த பிக்குமார்கள் இனவாத மற்றும்  மத வாத ரீதியில்  செயற்பாடுவதால் தான் பிரச்சினைகள் ஏற்படுவதாக நாட்டில் ஒரு வித தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்துள்ளார்

அவர்  தொடர்ந்தும் தெரிவிக்கையில் ''

இது போன்ற கருத்துக்களை முன் வைத்து விமர்சனம் செய்வோர்  அதற்கான காரணங்களை கண்டறிந்து அதற்கான தீர்வை காண வேணடும் என்பதில் ஆர்வம் காடடுவதில்லை.மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை போருக்கு முன்பு 1982 ஆம் ஆண்டு 28 ஆயிரம் சிங்கள மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். அந்த எண்ணிக்கை  தற்போது மிகவும் குறைந்துள்ளது.

அம் மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த அவர்களுக்கு பாராளுமன்ற பிரதிநிதி இல்லை . மாகாண சபையிலும் பிரதிநிதித்துவம் இல்லை. அதன் காரணமாகவே அவர்களின் அடிப்படை பிரச்சினைகளை அம்பிட்டிய சுமணரத்ன தேரோ அவர்களுக்காக குரல் எழுப்புகின்றார்.

அவர் சிங்கள மகக்களின் பிரச்சினைகளை மட்டும் முன் வைக்கவில்லை. இம் மாவட்டத்திலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளையும் இந்த சந்திப்பின் போது எமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

சிங்கள மக்களை பொறுத்தவரை அவர்கள் தங்கள் பரம்பரிய காணி உரிமையை கூட இழந்துள்ளனர்  சிறுபான்மை இனங்களாகவுள்ள கிராமத்தில் கிராம  சேவை அதிகாரியிடம் சான்றிதழை கூட பெற முடியாதவார்களாக இருப்பதாக அறியமுடிகின்றது

வாக்காளர் இடாப்பில் வாக்காளராக பதிவு செய்ய மறுக்கப்படுகின்றது . பிரதேச செயலகங்களில் அதிகாரிகள் வேண்டா வெறுப்பாக நடந்து கொள்கின்றார்கள்.  சிங்கள மொழியில் ஓப்படைக்கும் கடிதங்களை குப்பை கூடைகளில் வீசப்படுகின்றன போன்ற பிரச்சினைகள் எதிர்கொள்வதாக எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்.

இந் நாட்டில் சிறுபான்மை தமிழர் , சிறுபான்மை முஸ்லிம் என்ற வரை விலக்கணம்  தவறானது.   நகர் , மாவட்டம்  மாகாணம்  இன விகிதாசாரத்தில் தான்  வேறுபாடு காணப்படுகின்றது

குறிப்பாக கொழும்பு மாவட்டததை எடுத்துக் கொண்டால் சிங்கள மக்கள் பெருன்பான்மையாக இருக்கின்றார்கள்.   ஆனால் கொழும்பு நகரில் தமிழர்கள் பெருன்பான்மையாக வாழ்கின்றார்கள் இது தான் யாதர்த்தம்'' என்றார்.