சுற்றாடல் பேணுதல் மற்றும் சட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பிலான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றாடல் மாசடைதல் தொடர்பான பிரச்சினையினை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலான நடவடிக்கைகளை மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைவாக சுற்றாடலை பாதுகாப்பானதாக மாற்றும் செயற்றிட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உள்ள சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சுற்றாடல் பேணுதல் மற்றும் சட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பிலான செயலமர்வு 21.12.2016   புதன்கிழமை நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சின் சட்டப்பிரிவினால் இந்த செயலமர்வு  நடத்தப்பட்டது

அமைச்சின் சட்ட அதிகாரி திருமதி லம்பனி கிரியல்ல தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் கரையோரம்பேணல் மற்றும் கரையோர மூல வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் சட்ட அதிகாரி திருமதி பஞ்சாலி பெர்ணான்டோ, மாவட்ட இணைப்பாளர் ஏ.கோகுலதீபன், மாவட்ட சுற்றாடல் அதிகாரி எஸ்.உதயராஜன், மாவட்ட வனவள அதிகாரி உட்பட பலர் கலந்துகொண்டு சுற்றாடல் மாசுபடுத்ப்படும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல் சட்ட நடவடிக்கை தொடர்பில் கருத்துகளை வழங்கினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சூழல்மாசுபடும் நிலையினை தடுக்கும் வகையில் பொலிஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சட்ட ரீதியான வழிவகைகளை துரிதப்படுத்துவதற்கான செயலமர்வாக இது நடைபெற்றது.


இந்த செயலமர்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா , மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சின் சட்டப்பிரிவு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.