துறைநீலாவணையில் காணி உறுதிப்பத்திரம் அற்றோருக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைப்பு.

(சசி துறையூர் ) 

பொலிஸ் சேவையின் 150 ஆண்டு நிறைவை ஒட்டி துறைநீலாவணையில் இடம் பெற்ற நடமாடும் சேவையின் போது துறைநீலாவணை தெற்கு 01 கிராம சேவகர் கடமைப் பிரிவினை சேர்ந்த காணி உறுதிப்பத்திரம் அற்ற 7 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

களுவாஞ்சிகுடி பொலிசாரும், களுவாஞ்சிகுடி பிரதேச
செயலகமும் இணைந்து துறைநீலாவணை மகாவித்தியால ஒன்று கூடல் மண்டபத்தில் ஏற்பாடு செய்து நடாத்திய நடமாடும்
சேவையிலே உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பொறுப்பதிகாரி சனத்நந்தலால் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்சமூகசேவை உத்தியோகஸ்தர்கே.சிவகுமார்,  பதில் பொறுப்பதிகாரி என்.ரீ.அபூபக்கர், கிராமசேவை உத்தியோகஸ்தர்களான வீ.கனகசபை, ரி.கோகுலராஜ், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் த.விநாயகமூர்த்தி, மண்முனை தென் எருவில் பற்று காணிப்பிரிவு உத்தியோகஷ்தர்கள் ஆகியோர்
அதிதிகளாக கலந்துகொண்டார்கள்.

இந்த நடமாடும் சேவையில் பொதுமக்களுக்கான  பொதுசன மாதாந்த உதவிப்பணத்துக்காக விண்ணப்பித்தல், அடையாள அட்டைக்குவிண்ணப்பித்தல், பொலிஸ் பத்திரம் வழங்கள், ஆயுள்வேத மருத்துவ சேவை என்பன
வழங்கப்பட்டது.