மண்முனைப்பற்றில் மதுபானசாலைகளை மூடுமாறுகோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்றில் உள்ள மதுபானசாலைகளை மூடுமாறு கோரி பிரதேச மக்கள் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற அமைப்புகளின் ஒன்றியமான இணைத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

முண்முனைப்பற்று பிரதேசத்தில் ஏழு மதுபானசாலைகள் உள்ளதாகவும் தமது பிரதேசத்தில் அதிகூடிய மதுபானசாலைகள் உள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் பிரதேச மக்கள் எதிர்நோக்குகின்றனர்.
சீரழிக்காதே,சீரழிக்காதே மதுவால் சமூகத்தை சமூகத்தை சீரழிக்காதே,ஆலயத்திற்கு அருகில் மதுபானசாலைகளை வைக்காதே,கெடுக்காதே கெடுக்காதே சகோதர இனத்தையும் கெடுக்காதே,மாணவர்களை மதுபழக்கத்திற்கு ஈர்க்காதே போன்ற சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான பெண்கள் பலந்துகொண்டதுடன் பொது அமைப்புகளும் கலந்துகொண்டன.

மண்முனைப்பற்று ஆரையம்பதியில் பிரதான வீதியில் உள்ள மதுபானசாலையினால் தினமும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுதவாகவுமு; அவற்றினை அகற்ற நடவடிக்கையெடுக்குமாறு கடந்த காலத்தில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டபோதும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் கவலை தெரிவிக்கின்றனர்.

மண்முனைப்பற்று பிரதேசத்தில் பல மதுபானசாலைகள் மக்கள் குடியிருப்ப பகுதிகளிலும் ஆலயங்கள் மற்றும் பாடசாலைகளுக்கும் அருகில் காணப்படுவதனால் தினமும் அசௌகரியங்களை எதீhகொள்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மண்முனைப்பற்றில் உள்ள மதுபானசாலைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் எடுக்காது போனால் மண்முனைப்பற்றில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கப்படுவதாகவம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

சுpல இடங்களில் மக்கள் போராட்டங்கள் காரணமாக மதுபானசாலைகள் சில மூடப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அவ்வாறு இதுவரையில் மதுபானசாலைகள் பூட்டப்படவில்லையெனவுமு; மக்கள் தெரிவிக்கின்றனா.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களும் ஆதரவு தெரிவித்தனர்.