தேசியபோதைப் பொருள் தடுப்பு மற்றும் சிறுவர் பாதுகாப்புவேலைத் திட்டம் தொடர்பான செயலமர்வு

(லியோன்)

தேசியபோதைப் பொருள் தடுப்பு மற்றும் சிறுவர் பாதுகாப்புவேலைத் திட்டம் தொடர்பான பயிற்றுனருக்கான  பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது


மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதிக் கல்விப்பணிப்பாளர் திருமதி.ஞா .கங்கேஸ்வரன்  தலைமையில்  தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் .அ .ஜெயநாதன் ஒருங்கிணைப்பில்  நடைபெற்ற  இந்த செயலமர்வு மட்டக்களப்பு புனித சிசிலியா தேசிய பாடசாலை பிரதான கேட்போர் கூடத்தில் இன்று (28.11.2016) திங்கள்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தேசிய போதைப் பொருள் தடுப்பு மற்றும் சிறுவர் பாதுகாப்பு வேலைத் திட்டத்தினை எதிர் வரும் ஆண்டில் சிறந்த முறையில் முன்னெடுப்பதற்காக பாடசாலைகளில் ஆலோசனை வழிகாட்டலுக்கு பொறுப்பாக உள்ள ஆசிரியர்களுக்கும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும்  பயிற்றுனருக்கான இந்த பயிற்சி  செயலமர்வு நடைபெற்றது .

இந்த செயலமர்வில் யேசு சபையினரின்  இலங்கை நாட்டிக்கான பணிப்பாளர் அருட்பணி. பெனி அடிகாளார், மட்டக்களப்பு   வலயக்கல்வி அலுவலகத்தின் முன்பிள்ளைபருவ அபிவிருத்திக்கான உதவி கல்விப்பணிப்பாளர் எம் .புவிராஜ் மற்றும் வழிகாட்டல் ஆலோசனை ஆசிரிய ஆலோசகர் பு.கிருஸ்ணமூர்த்தி  ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.