சம்பிரதாயத்திற்காக மட்டும் கலைகளை பற்றி நாங்கள் பேசுவதோ ,போற்றுவதோ அர்த்தம் இல்லை என அரசாங்க அதிபர் தெரிவித்தார்

 (லியோன்)

சம்பிரதாயத்திற்காக  மட்டும் கலைகளை பற்றி நாங்கள் பேசுவதோ ,போற்றுவதோ அர்த்தம் இல்லை ,அதற்கான மேடைகளை நாங்கள் அமைத்துகொடுக்க வேண்டும் என இன்று நடைபெற்ற மாவட்ட இலக்கிய விழா நிகழ்வில் உரையாற்றும் போது .அரசாங்க அதிபர் திருமதி .பி எஸ் .எம் .சார்ள்ஸ் இவ்வாறு தெரிவித்தார்


மாவட்ட கலாசார அதிகார சபையும் மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் மாவட்ட இலக்கிய விழா 2016 மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி .பி எஸ் .எம் .சார்ள்ஸ் தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது .

இதன் ஆரம்ப நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமான இலக்கிய விழா நிகழ்வில்   பரதகலாலயா நாட்டியாலய மாணவர்களின்  நடனமும் மாணவர்கள் மற்றும் கலாசார உத்தியோகத்தர்களின் கலாசார கலை இலக்கிய   நிகழ்வும் ஓய்வுபெற்ற கிழக்கு பல்கலைக்கழக  பேராசிரியர் எஸ் .யோகராஜாவுக்கான  கௌரவிப்பு நிகழ்வும்  நடைபெற்றது 

2016 ஆம் ஆண்டுக்கான மாவட்ட  இலக்கிய விழா நிகழ்வில்   பிரதேச செயலக மட்டத்தில் நடத்தப்பட்ட கலாசார இலக்கிய போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற பாடசாலை  மாணவர்கள்  மற்றும் கலாசார உத்தியோகத்தர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .

இந்நிகழ்வில்  மாநகர ஆணையாளர் எம் .உதயகுமார் ,மண்முனை மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .சத்தியநாதன் , கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ் .ஸ்ரீ  கிருஸ்ணராஜா  ,மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் எஸ் .ரங்கநாதன் , பிரதேச செயலாளர்கள் , கலாசார உத்தியோகத்தர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் , பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர் .

இந்த இலக்கிய விழா   நிகழ்வில் உரையாற்றிய போது அரசாங்க அதிபர் தெரிவிக்கையில் இப்போது இலக்கிய சம்பந்தமான ,கலாசார சம்பந்தமான கலைகள்  எங்களுடைய மக்களிடையே அழிந்து வருகின்ற சிந்தனை ,ஆர்வம் ,ஆற்றல் என்பன இன்று  எங்களுடைய சமூகத்தின்  ஒரு கேள்வி குறியாகி இருக்கின்றது .

வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை கலைகளும் ,பழைமை நிறைந்த கலைகளும், கலாசாரங்களும் ,இலக்கியங்களும் பேணி பாதுகாக்கப்பட்ட வேண்டிய தேவை ஒன்றாக காணப்படுகின்றது .

கொழும்பிலும் ,மலையகத்திலும் ,புலம்பெயர்ந்து  வாழ்ந்துகொண்டு இருக்கின்ற தமிழர்கள் தங்களுடைய எழுத்தாற்றல்களை , தம்முடைய படைப்புக்களை ,தங்களுடைய கலாசாரங்கள் எல்லாம் பேணுவதற்காக பல விதமான முயற்சிகளை மேற்கொண்டு  பிரசுரித்து அவற்றை வெளியிட்டு ,கலாசார நிகழ்வுகளை நடத்தி பெருமைபெற்று மற்றைய நாட்டவர்கள் எல்லாம் பாராட்ட படுகின்ற அளவுக்கு பிரபலம் பெற்று வருகின்றார்கள் .

ஆனால் இந்த தாயகத்திலே  இவைகள் எல்லாம் அருகி வருகின்றமை வேதனை குரிய விடயமாக பார்க்க வேண்டிய நிலையாக தான் இருக்கின்றது  .  

முக்கியமாக இந்த பகுதியில் வாழ்கின்ற பெரும்பான்மையாக தமிழ் பேசும் மக்கள் தங்களுக்குள் இணைந்தும் ,பிரிந்தும் பல்வேறு கலாசாரங்களை ,இலக்கியங்களை தன்னகத்தில் கொண்டிருக்கின்றார்கள் .

அவற்றையெல்லாம் பாதுகாப்பட வேண்டிய பிரதேசமாக இந்த பிரதேசம் காணப்படுகின்றன .

அவற்றில் முக்கியமாக இந்த மாவட்ட கலாசார பேரவை என்கின்ற அந்த பேரவை தன்னுடைய தலைமைகொண்ட பணியாக இவற்றை செய்யப்பட வேண்டும்.

இபோதெல்லாம் மேடையில் நடத்தப்படுகின்ற அத்தனை நிகழ்ச்சிகளும் பின்னணி இசைகளோடு மட்டும் நடத்தப்படுவதை காணக்கூடியதாக இருக்கின்றது .

இந்த இசையை வழங்குகின்ற , பாட்டை இசைக்கின்ற ,பாடலை இயற்றுகின்ற கலைஞர்களின் சேவைகள் , ஆற்றல்கள், அவர்களுடைய கலை ,அவர்களுடைய அற்பணிப்புக்கள் இல்லாமல் போகின்ற நிலை காணப்படுகின்றது .

இந்த கலைஞர்கள் தங்களுடைய வருமானத்தை ஈட்டிகொல்வதற்காக இவர்களுக்கு மேடை அமைத்து கொடுக்காவிட்டால் எப்படி அவர்களுடைய வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்வார்கள் .

எதிர் காலத்திலே இந்த கலைகளில் ஈடுபடுவதற்கு ஆர்வம் உள்ளவர்கள் கூட தயங்கி பின்வாங்கி செல்கின்ற ஒரு நிலை ஏற்றப்படும் .

எனவே சம்பிரதாயத்திற்க்காக மட்டும் இந்த கலைகளை நாங்கள் பேசுவதோ ,போற்றுவதோ அர்த்தம் இல்லை , அதற்கான மேடைகளை நாங்கள் அமைத்துகொடுக்க வேண்டும் .

அவர்களை ஊக்குவிப்பவர்களாக நாங்கள் மாறவேண்டும் . அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காக நாங்கள் உழைக்கின்றவர்களாக இருக்க வேண்டும் .

அப்படியாக இருந்தால் தான் இந்த கலாசார பேரவை , கலாசார விழா , இலக்கிய விழா என்பவற்றுக்கான முழுமையான அர்த்தத்தை நாங்கள் பெற்றுக்கொள்ளலாம் .

இதே நடைமுறையில்  வவுனியாவில் நான் இருக்கும்போது செயல்படுத்தி வெற்றியும் கண்டுள்ளேன் . அத்தனை கலைஞர்களுக்குமான மேடைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு  தேசிய ரீதியில் பிரபலம் பெற்ற நாட்டிய ,நாடகங்களை வவுனியாவில் வழங்கி இருந்தார்கள் .

கொழும்பு ,கண்டி ,யாழ்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு அவர்கள் தங்களுடைய நிகழ்ச்சிகளை அனுப்பிக்கொண்டிருந்தார்கள் .

ஏனென்றால் கலையின் முழு வடிவத்தை அரங்கிலே காணக்கூடிய சந்தர்ப்பத்தை அவர்கள் வழங்கி கொண்டிருந்தார்கள் . 

இந்த மட்டக்களப்பு மாவட்டம் தமிழிலும் ,இலக்கியத்திலும் ,கலாசாரத்திலும் முன்னணி வகிக்கும் ஒரு மாவட்டம் , தாயகம் என்று சொல்லி பெருமை கொள்கின்ற கலைகளை தன்னகத்தில் கொண்டிருக்கின்ற மாவட்டம் , வரலாற்று ரீதியாகவும் ,கலாசார ரீதியாகவும் ,பிரதேச ரீதியாகவும் பல்வேறு கலை வடிவங்களை படித்து கொண்டிருக்கின்ற ஒரு மாவட்டம் .

எனவே இந்த கலைகள் அழிந்து போகாமல் பாதுகாக்க வேண்டியது இதன் காவலர்களின் கடமை ,எதிர் காலத்திலே  முழுமையான கலை வடிவங்களை இந்த மேடைகளில் பார்ப்பதற்கு சந்தர்ப்பங்களை அனைத்து கலைஞர்களுக்கும் வழங்க வேண்டும் என தெரிவித்துக்கொண்டார் .