திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக பொதுமக்களுடனான கலந்துரையாடல்

(லியோன்)

திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பான பொதுமக்களுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பில் நடைபெற்றது .

மட்டக்களப்பு மாநகர சபை ஏற்பாட்டில் கல்லடி உப்போடை மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் அனுசரணையில் திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான பொதுமக்களுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாநகர சபை பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில் நேற்று மாலை  நடைபெற்றது .

மட்டக்களப்பு மாநகர சபையினால்  திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக எதிர்கொள்கின்ற சில பிரச்சினைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதன் மூலம்  பொதுமக்களும்  இந்த பிரச்சினைகளை உணர்ந்து   திண்மக் கழிவு முகாமைத்துவத்தை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது தொடர்பாக  கருத்தறியும்  கலந்துரையாடலாக இந்நிகழ்வு  நடைபெற்றது .


இந்த கலந்துரையாடல் நிகழ்வில் மட்டக்களப்பு கல்லடி பொதுசுகாதார பிரிவு பொதுசுகாதார உத்தியோகத்தர் கே .ஜெய்சங்கர் , கல்லடி உப்போடை பிரதேசத்தை சேர்ந்த மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் . ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் . பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்  பாடசாலை மாணவர்கள் ,கிராம மக்கள் என பலர் கலந்துகொண்டனர் .