மட்டக்களப்பில் சிறப்பான முறையில் நிறைவுபெற்ற கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா -எதிர்க்கட்சி தலைவரும் பங்கேற்பு

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பில் கோலாகலமான முறையில் நடைபெற்றது.

கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா காலை அமர்வு மாலை அமர்வாக சிறப்பான முறையில் நடைபெற்றுவருந்தது.

இன்று சனிக்கிழமை பிற்பகல் கிழக்கு மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள் அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் இறுதி நாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னத்தின் முழுமையான ஏற்பாட்டின் கீழ் சிறப்பான முறையில் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.

இறுதி நாள் நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் மக்களின் அடையாளங்களையும் கலைகலாசார பண்பாட்டு விழுமியங்கiயும் பாதுகாக்கும் வகையில் வருடாந்த இந்த தமிழ் இலக்கிய விழா நடாத்தப்படுகின்றது.

இந்த மாகாண இலக்கிய விழாவில் கலைத்துறைக்கு பெரும்பங்காற்றிய மூத்த கலைஞர்கள் 12பேர் வித்தகர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்இளம் கலைஞர்கள் 18பேர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள எழுத்தாளர்களிடம் இருந்து சிறந்த நூல் பரிசுக்காக தெரிவுசெய்யப்பட்ட ஆறு பேர் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் இதன்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவாசய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,வடக்கு கல்வி அமைச்சர் த.குருகுலராஜா,பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சார்ந்தவர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை சார்ந்தவர். அவர்களுடைய கட்சி உறுப்பினர்கள் அவரவரோடு இருக்கின்றார்கள். ஏனைய பல கட்சிகளும் சிறுபான்மைக் கட்சிகளும் இந்த இரண்டு கட்சிகளோடும் சேர்ந்து கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு நல்கிக்கொண்டிருக்கின்றார்கள் எனவும் எதிர்க்கட்சி தலைவர் இங்கு தெரிவித்தார்.