சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய கொலை குற்றவாளி விடுதலை

(லியோன்)

ஏழு வருடங்களாக  கொலை குற்றவாளியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய  விடுதலை செய்யப்பட்டுள்ளார் .


2009ஆம் ஆண்டு   கொலை செய்த சம்பத்துடன்  கைதுசெய்யப்பட்டு  7 வருடங்களாக  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எட்வேட் சகாயதநாதன் என்பவர்    மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் (நேற்று)  செவ்வாக்கிழமை (18)  ஆஜர்படுத்தியதை தொடர்ந்து   சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த நபர் விடுதலை செய்யுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி  மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்

கொலை குற்றவாளியாக கூறப்படும் குறித்த நபர் தொடர்பில் கொலை செய்ததற்கான போதுமான  சாட்சியங்கள் இல்லாத காரணத்தினாலும் , சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவும்  குறித்த நபரை விடுதலை செய்யுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார் .


குறித்த வழக்கு தொடர்பாக விரைவு படுத்தி  சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலை பெற்றுக்கொள்ளுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா நீதிமன்ற  பொலிசாருக்கு விடுக்கப்பட்ட உத்தரவை தொடர்ந்து  சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக குறித்த நபர் விடுதலை செய்யப்பட்டமை  குறிப்பிடத்தக்கது .