பேத்தாளை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு

(அனாம்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்தில் உள்ள பேத்தாளை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

வித்தியாலய அதிபர் கே.கதிர்காமநாதன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தற்போதய மாகாண சபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தனின் தாயாரான திருமதி சிவநேசத்துரையினால் சித்தியடைந்த மூன்று மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீ;கிருஸ்ணராஜா, வாழைச்சேனை கோட்டக்கல்வி பணிப்பாளர் என். குணலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தற்போது முன்னாள் முதலமச்சர் சிறைவாசம் அனுபவிக்கும் நிலையிலும் கூட கல்விக்கு தொடர்ந்து உதவி வரபவர் என்ற வகையில் தனது தாயின் மூலம் இந்த சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கியிருக்கின்றமை மிகவும் பாராட்டுக்குரியத்து என வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீ;கிருஸ்ணராஜா தனதுரையில் தெரிவித்தார்.