துரைவந்தியமேட்டு கிராமத்துக்கான ஒரே ஒரு முழுமையான போக்குவரத்து பாதையினையும் மழை காலத்துக்கு முன்பாக சீராக புனரமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை.







சுமார் நான்கு வருடத்திற்கு முன்பாக புதிதாக அமைக்கப்பட்ட துரைவந்திய மேடு கிராமத்துக்கான கொங்கிறிட் பாதை சில இடங்களில் மிக மோசமாக உடைப்பெடுத்துள்ளதோடு இன்னும் மோசமான உடைப்புக்கள் ஏற்படுவதற்கான ஏது நிலையோடு காணப்படுகின்றது.

 நிச்சயமாக இனி வரும் மழைக்காலங்களின் போது கொங்கிறிற் பாதை பாரிய அளவில் உடைப்பெடுக்கும். ஏனெனில் மழைக் காலங்களில் இப் பாதை மேலாக வெள்ளநீர் கரைபுரண்டு ஓடும் போது பாதை முற்றாக நீரில் மூழ்குவதனால்.

அம்பாரை மாவட்டத்தின் எல்லைக் கிராமான  துரைவந்தியமேடு கிராமம் தீவு போன்ற புவியியல் அமைப்பினை கொண்ட அதாவது மட்டு வாவி மேற்கு புறமாகவும்  வட கிழக்காக வயல்நிலங்களால் சூழப்பப்பட்டதுமான ஒரு கிராமம்.

தெற்குப்புறமாக சேனைக்குடியிருப்பு கிராமத்து பாதையுடனும் வடக்குபுறமாக துறைநீலாவணை பாதையுடனும் இணைப்பு மேற்கொண்டு இரு வழித் தொடர்புகளை மாத்திரம் கொண்டுள்ளது.

 இரண்டு வீதிகளும் மாரிகாலங்களில் முற்றாக வெள்ளத்தினால் மூழ்கிப்போகும். வெள்ளநீர் வடியும் வரை தரைவழி  பயணம் இந்த மக்களுக்கு குறைந்தது ஒரு மாதகலாத்திற்கு தடைப்பட்டு இருக்கும்.

துரைவந்தியமேடு துறைநீலாவணை பாதை மிக மேசமான நிலையில் போக்குவரத்துக்கு ஒவ்வாதா தன்மையுடன் காணப்பட. கிட்டங்கி துரைவந்திய மேடு பாதை மாத்திரம் கடந்த காலங்களில் கொங்கிறிற் பாதையாக அமைக்கப்பட்டதன் பின்னர் மக்களுக்கு சற்று ஆறுதல் கிட்டியது.

ஆனால் இது தொடந்து நிலைத்திருக்குமா என்பது தான் மக்களின் அங்கலாய்ப்பு.
ஒவ்வொரு வருடமும் ஏற்படும் வெள்ளநிலைமையினால் மிக பாதிக்கப்படும் இந்த வீதி இம்முறை வெள்ள நிலைமைக்கு தாக்கு பிடிக்காது எனவே அதிகாரிகள் உடனடியாக இது தொடர்பாக கவனம் செலுத்தி பாதையினை செப்பனிட்டு தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.