கரையோர வள மீள் அமைப்பு மற்றும் நிலையான முகாமைத்துவம் தொடர்பான வேலைத்திட்டங்கள்

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட  கரையோர வள மீள் அமைப்பு மற்றும் நிலையான முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல்இன்று மட்டக்களப்பில்   நடைபெற்றது


மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட கரையோர பேணல் மற்றும் மூலவள திணைக்கள  திட்ட இணைப்பாளர் எ.கோகுலதீபன் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி .எஸ் .எம் .சார்ள்ஸ் தலைமையில்  கரையோர வள மீள் அமைப்பு மற்றும் நிலையான முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல்இன்று மட்டக்களப்பில்  லங்கா ரெஸ்ட் விடுதியில் நடைபெற்றது .

மட்டக்களப்பு மாவட்டத்தின் பனிச்சங்கேணி வாவியினை மையப்படுத்தி வாகரை வாவியில் மேற்கொள்ளப்பட்டு  வரும்  வேலைத்திட்டத்தின் கீழ் சில வேலைத்திட்டங்கள்   ஏனைய கரையோர பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளது .

அதன் அடிப்படையில் அந்த வேலைத்திட்டங்களின் மூலம்  பெற்றுக்கொண்ட பெறுபேறுகளை கொண்டு மக்கள் மத்தியில் இருந்து கருத்துக்களை பெற்று அதன் மூலம் அமுல்படுத்தப்பட்ட திட்டங்களை அதிகாரி மட்டத்தில் ஆவணப்படுத்தி அத்திட்டங்களை இறுதி படுத்துவதற்கான  அரச திணைக்களம் மற்றும்  பிரதேச செயலக அதிகாரிகாரிகளுடனான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .

,இந்த கலந்துரையாடல் நிகழ்வில்  மாவட்ட கரையோர பேணல் மற்றும் மூலவள திணைக்கள கண்காணிப்பு ஆலோசகர்   போதிவன்னி ஆராச்சி , அரச திணைக்கள அதிகாரிகள் , பிரதேச செயலக செயலாளர்கள், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள்  மற்றும் கரையோர பேணல் மற்றும் மூலவள திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் .