கலாசார சீரழிவு செயற்பாடுகளை இடைநிறுத்த இளைஞர் விழிப்புணர்வு குழுக்கள் அமைக்க நீதவான் பணிப்புரை

(லியோன்)  
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறுகின்ற கலாசார சீரழிவுகள் , சட்டவிரோத செயற்பாடுகளை இடைநிறுத்த இளைஞர் விழிப்புணர்வு குழுக்கள் அமைக்க  
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் .

மட்டக்களப்பில் அண்மைக்காலங்களில் தொடர்ச்சியாக அதிகரித்து  வருகின்ற  சிறுவர் துஸ்பிரயோகங்கள்  , விபச்சாரம் நடவடிக்கைகள் , போதைவஸ்து மற்றும் மது  பாவனைகள் ,பெண்களுக்கு எதிரான வன்முறைகளை போன்ற பல சமூக விரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்த இளைஞர் விழிப்புணர்வு குழுக்களை அமைக்க சமுதாயம்  சார்ந்த அமைப்புக்களுக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா  பணிப்புரை விடுத்துள்ளார் .

இந்த இளைஞர் அமைப்புக்கள் ஊடாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளையும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு  சட்ட நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியினால்  சட்ட ஆணைக்குழு , சூரியா பெண்கள் அமைப்பு , சமுதாயஞ்சார்  சீர்திருத்தப்பிரிவு , சிறுவர் நன்னடத்தைப் பிரிவு ஆகியவற்றுக்கு எழுத்து மூலம் பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளது


தற்போது பெருகிவரும் சட்டவிரோத செயற்பாடுகள் கட்டுப்படுத்த இந்தநடவடிக்கை பெருமளவு உதவும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன்  இது தொடர்பான  ஆலோசனைகளை நேரடியாகவும் ,எழுத்து மூலமாவும் குறித்த அமைப்புக்களுக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜாவினால்  அறிவிக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது