சிங்களக்கைதிகளுக்கு ஒரு நீதி தமிழ்கைதிகளுக்கு இன்னொரு நீதியா? - ரெலோ செயலாளர்நாயகம் ஹென்றி மகேந்திரன்

பல தசாப்தகாலமாக இலங்கைச்சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகள் மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் முன்னர் உண்ணாவிரதமிருந்தபோது அரசினாலும் அரசியல் வாதிகளினாலும் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.எனவே இன்னும் எந்தக்காரண காரியத்தைiயும் கூறாமல் அனைவருக்கும் பொதுமன்னப்பு அளிக்கவேண்டும்.
இவ்வாறு ரெலோ கட்சியின் செயலாளர்நாயகம் ஹென்றி மகேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த காலங்களில் சிறிமாவோ அம்மையாhரின் ஆட்சிக்காலத்தில் 1971களில் சிறைப்பிடிக்கப்பட்ட ஜே.வி.பி.போராளிகள் மற்றும் பிரேமதாசா காலத்தில் சிறைப்பிடித்த ஜே.வி.பி. சிங்களப்போராளிகளும் பின்னர்வந்த சந்திரிகா அம்மையாரின் காலத்தில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள்.

ஆனால் எந்தக்குற்றமும் செய்யாமல் பல தசாப்த காலம் சிறையில்வாடும் தமிழ்க்கைதிகள் மட்டும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.
எனின் சிங்களக்கைதிகளுக்கு ஒரு நீதி தமிழ்கைதிகளுக்கு இன்னொரு நீதியா? இது பாரபட்சம்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை அரசுடன் மேற்கொண்ட தீர்மானப்படி நாட்டில் அமுலிலுள்ள பயங்கரவாததடைச்சட்டம் நீக்கப்பட்டி ருக்கவேண்டும். ஆனால் இதுவரை அச்சட்டம் நீக்கப்படவில்லை.தீர்மானம் மீறப்பட்டுள்ளது.

எனவே அமுலிலுள்ள பயங்கரவாததடைச்சட்டம் இன்றைய நல்லாட்சியில் ஜனாதிபதியினால் உடனடியாக நீக்கப்படவேண்டும்.

அத்துடன் தமிழ்க்கைதிகளின் கோரிக்கையை அரசாங்கமும் ஜனாதிபதியும் ஏற்று இன்னும் காலந்தாழ்த்தாது பொதுமன்னிப்பளித்து அவர்களை விடுதலைசெய்யவேண்டும்.