மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கிடையிலான கலாசார போட்டியொன்று இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு ,நாவற்குடா இந்துக்கலாசார மண்டபத்தில் இந்த நிகழ்வில் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் ஆரம்பமானது.
பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் தமது கடமை திறமைகளுக்கு அப்பால் அவர்களுக்குள் புதைந்துள்ள கலைத்திறமையினை வெளிக்கொணரும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
இந்த போட்டியில் கிராமிய பாடல்கள் மற்றும் நாடகங்கள் என்ற பங்குகொண்டதாகவும் இதன்போது 09 கிராமிய பாடல் குழுவும் 10 நாடக குழுவும் பங்குகொண்டதாகவும் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் தெரிவித்தார்.
ஆரச கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்களின் கலைத்திறமைகளை வெளிக்கொணரும் வகையிலும் அவர்களின் செயற்பாடுகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையிலும் இந்த போட்டி ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த போட்டியின்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அழகு,அதன் இயற்கை தன்மை,அதன் கலாசாரம் பண்பாடுகள் மற்றும் மாவட்டத்தின் பழமையினை வெளிப்படுத்தும் வகையில் கிராமிய பாடல்கள் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment