News Update :
Home » » பாடசாலைகளுக்கிடையிலான குழு விளையாட்டுக்களில் மட்டக்களப்பு கல்வி வலயம் சாதனை

பாடசாலைகளுக்கிடையிலான குழு விளையாட்டுக்களில் மட்டக்களப்பு கல்வி வலயம் சாதனை

Penulis : Anthony Leon raj on Tuesday, September 6, 2016 | 1:16 AM

(லியோன்

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட  குழு விளையாட்டுக்களில் மட்டக்களப்பு கல்வி வலயம் சாதனை படைத்துள்ளது
.கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையே நான்கு கட்டங்களாக நடைபெற்ற குழு விளையாட்டுக்களில் மட்டக்களப்பு கல்வி வலயம் 309 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினையும் , திருகோணமலைக் கல்வி வலயம் 76 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும் ,கல்குடா கல்வி வலயம் 71புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளதாக  மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே .பாஸ்கரன்   தெரிவித்தார் .
கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட குழு விளையாட்டுக்கள் மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டுகளில் கல்வி வலயங்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் மட்டக்களப்பு வலயம் குழு விளையாட்டுகளில் 309 புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 88 புள்ளிகளையும் ,

திருகோணமலை வலயம் குழு விளையாட்டுகளில் 76 புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 63 புள்ளிகளையும் ,

கல்குடா  வலயம் குழு விளையாட்டுகளில் 71 புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 28 புள்ளிகளையும் ,

மட்டக்களப்பு மத்தி  வலயம் குழு விளையாட்டுகளில் 62 புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 9 புள்ளிகளையும் ,

அம்பாறை  வலயம் குழு விளையாட்டுகளில் 58  புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 187 புள்ளிகளையும் ,

கந்தளாய்  வலயம் குழு விளையாட்டுகளில் 46  புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 71 புள்ளிகளையும் ,

திருக்கோவில்  வலயம் குழு விளையாட்டுகளில் 39 புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 8 புள்ளிகளையும் ,

கிண்ணியா   வலயம் குழு விளையாட்டுகளில் 34  புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 98  புள்ளிகளையும் ,

கல்முனை  வலயம் குழு விளையாட்டுகளில் 28 புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 93 புள்ளிகளையும் ,

மட்டக்களப்பு மேற்கு  வலயம் குழு விளையாட்டுகளில் 26 புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 43 புள்ளிகளையும் ,

பட்டிருப்பு வலயம் குழு விளையாட்டுகளில் 21  புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 211  புள்ளிகளையும் ,

தெகியத்தகண்டி  வலயம் குழு விளையாட்டுகளில் 15 புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 41 புள்ளிகளையும் ,

அக்கரைப்பற்று  வலயம் குழு விளையாட்டுகளில் 14 புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 48 புள்ளிகளையும் ,

மூதூர்  வலயம் குழு விளையாட்டுகளில் 02 புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 62 புள்ளிகளையும் , 

சம்மாந்துறை  வலயம் குழு விளையாட்டுகளில் 02 புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 38 புள்ளிகளையும் ,

மகோயா  வலயம் குழு விளையாட்டுகளில் புள்ளிகள் பெறவில்லை  மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 29 புள்ளிகளையும் , 

திருகோணமலை வடக்கு வலயம் குழு விளையாட்டுகளில்  புள்ளிகள் பெறவில்லை  , மெய்வல்லுனர் விளையாட்டுகளில்  8 புள்ளிகளையும் பெற்றுள்ளன .  

கிழக்கு மாகாணக் கல்வி பாடசாலைகளில் குழு விளையாட்டு மற்றும் மெய்வல்லுனர் ஆகிய இரு விளையாட்டுக்களிலும் மொத்தமாக பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயம் குழு விளையாட்டுக்களில்  309  புள்ளிகளையும் , மெய்வல்லுனர் விளையாட்டுக்களில்  88 புள்ளிகளையும் மொத்தமாக 397 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .


Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger