மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கான மதில் அமைக்கும் பணிகள்

(லியோன்)

மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கான  சுற்றுமதில் அமைக்கும்  பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய  அதிபர் கே .ஸ்ரீதரன்  பாடசாலை ஆசிரியர்கள் ,பாடசாலை மாணவர்கள் மற்றும்  பெற்றோர்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு மாவட்ட  பாராளுமன்ற  உறுப்பினர்களான எஸ் . வியாலேந்திரன் மற்றும் ஞா .ஸ்ரீநேசன் ஆகியோரினது   பன்முகப்படுத்தப்பட்ட  நிதி ஒதுக்கீட்டின்  கீழ்  பாடசாலைக்கான  ஒரு பகுதி மதில் அமைக்கும்  பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .