மட்டக்களப்பு இந்து கல்லூரி ஸ்ரீ தண்டாயுதபாணி முருகன் ஆலய சங்காபிசேக நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு இந்து கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி முருகன்
  ஆலயத்தின் கும்பாபிசேக  தினத்தை முன்னிட்டு சங்காபிசேகம் நடைபெற்றது


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு இந்து கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி முருகன்   ஆலயத்தின் கும்பாபிசேக  தினத்தை  முன்னிட்டு  108 சங்காபிசேகம் ஆலய பிரதம குரு  பிரம்ம ஸ்ரீ சரவணபவ சர்மா  குருக்களின் தலைமையில் இன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்த உற்சவத்தில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா . ஸ்ரீநேசன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .

இதனை தொடர்ந்து கல்லூரி அதிபர் கே .அருள்பிரகாசம் தலைமையில் பாடசாலைக்கான போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது .

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா . ஸ்ரீநேசனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியினால்  பாடசாலைக்கான போடோ கொப்பி இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது,