தமிழர்களின் கலைகலாசாரங்களில் நம்பிக்கைகொள்ளும்போதே அந்த இனத்தினை தக்கவைக்கமுடியும் -கிழக்கு பல்கலைக்கழக துணை உபவேந்தர்

தமிழர்களின் கலை,கலாசார விழுமியங்களில் தமிழ் மக்கள் அசைக்கமுடியாத நம்பிக்கையை கொள்ளவேண்டும்.அதன் மூலமே தமிழ் இனத்தினை தக்கவைத்துக்கொள்ளமுடியும் என கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணை உபவேந்தரும் தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழு உறுப்பினருமான டாக்டர் கே.கருணாகரன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட முத்தமிழ் விழாவின் இறுதி நாள் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

மட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் சுவாமி விபுலானந்தர் அரங்கில் இந்த இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணை உபவேந்தரும் தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழு உறுப்பினருமான டாக்டர் கே.கருணாகரன் தலைமையில் இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வின்போது பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் இசை நிகழ்வுகளும் நடைபெற்றன.

இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் அழைக்கப்பட்டிருந்தபோதில் கலந்துகொள்ளவில்லை.