சுயதொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் திறன் அபிவிருத்தி தொடர்பான செயலமர்வு


(லியோன்)

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்கள ஏற்பாட்டில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான சந்தைப்படுத்தல் தொழில் திறன் அபிவிருத்தி தொடர்பான ஒரு நாள் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது .


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக  வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்கள ஏற்பாட்டில் வாழ்வின் எழுச்சி தலைமை முகாமையாளர் திருமதி . கே .வாமதேவாவின்  ஒழுங்கமைப்பில்  மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  சுயதொழில் முயற்சியாளர்களின் தெரிவு செய்யப்பட பயனாளிகளுக்கான சந்தைப்படுத்தல் தொழில் திறன் அபிவிருத்தி தொடர்பான ஒரு நாள் செயலமர்வு இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில் இன்று இடம்பெற்றது .

சுயதொழில் முயற்சியாளர்களின்  சந்தைப்படுத்தல் அறிவை விருத்தி செய்யும் பயிற்சி வேலைத்திட்டத்தின் கீழ் வெற்றிகரமான வர்த்தக சமூகம் ஒன்றினை உருவாக்கும் பொருட்டு தொழில் முயற்சியாளர்களின் வர்த்தக அறிவு , சந்தைப்படுத்தல் திறமை ,ஆற்றல்களை மேம்படுத்தல் மற்றும் புதிய சந்தை வாய்ப்புக்களை இனங்காண்பது தொடர்பான பயிற்சிகள் இந்த  செயலமர்வில் வழங்கப்பட்டது  .


இன்று இடம்பெற்ற செயலமர்வில் வளவாலர்களாக  ஏறாவூர் பற்று செங்கலடி விதாதா வள நிலைய திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் என் .சிவநாதன் , விஞ்ஞான வள நிலைய உத்தியோகத்தர் எஸ் . விக்னேஸ்வரன் , மண்முனை வடக்கு வாழ்வின் எழுச்சி கருத்திட்ட முகாமையாளர் திருமதி எஸ் . கண்ணன் , வாழ்வின் எழுச்சி கருதிட்ட உதவியாளர் டி .சி . வசந்தன்  மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட வாழ்வின் எழுச்சி  சுயதொழில் பயனாளிகள் கலந்துகொண்டனர் .