புதிய கிழக்கு பிராந்திய பொலிஸ் அத்தியட்சர் கடமையினை பொறுப்பேற்பு

கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக சுமித் எதிரிசிங்க இன்று திங்கட்கிழமை தமது கடமைகளைப்பொறுப்பேற்றுக்கொண்டார்.
மாத்தறையில் பிரதிப்பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய அவர் இன்று முதல் கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய எல்.ஏ.ஜயசிங்க கண்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக கடமையேற்றுள்ள சுமித் எதிரிசிங்கவுக்கு இன்று திங்கட்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் காரியாலயத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபரினால் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பொலிஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர்கள்,பிராந்திய பொலிஸ் அத்தியட்சர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.