2016 கல்வி பொது தர சாதாரண தர பரீட்சைக்கு மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு

(லியோன் )

2016  கல்வி பொது தர சாதாரண தர   பரீட்சைக்கு மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு  மட்டக்களப்பு வெல்லாவெளியில் நடைபெற்றது .


கிழக்கு இளைஞர் முன்னணி அமைப்பின் ஏற்பாட்டில் அதன்  தலைவரும் ( தேசிய சகவாழ்வு  கலந்துரையாடல் மற்றும் அரசகருமமொழிகள் அமைச்சு) பிரதிப்பணிப்பாளர்  கணேசமூர்த்தி கோபிநாத் வழிகாட்டலின்  கல்வி பொது தர சாதாரண தர மாணவர்களுக்கான தொடர் - 05   இலவச கல்விக் கருத்தரங்கு மட்டக்களப்பு வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடைபெற்றது .

இந்த இலவச கல்விக் கருத்தரங்கில்  தமிழ் ,விஞ்ஞானம் ,  வரலாறு ஆங்கிலம் , ஆகிய பாடங்களுக்கான  பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது .

இதில் சுமார் 300  மேற்பட்ட பாடசாலை மானவர்கள கலந்துகொண்டனர்  .