பத்மன் மோட்டர்ஸ் நிறுவனம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

(லியோன்)

பத்மன் மோட்டர்ஸ் நிறுவனம் இன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது .
 மட்டக்களப்பு திருகோணமலை வீதி இலக்கம் 569,B முகவரியில் அமைந்துள்ள அனைத்து வாகனங்களுக்கான உதிரி பாக விற்பனை முகவர் நிறுவனமான பத்மன் மோட்டார்ஸ் இன்று காலை 09.30 மணியளவில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது

இன்று காலை இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வில்   மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவரும் ,ஈஸ்ட் லகூன் ஹோட்டல் உரிமையாளருமான .  எம்.செல்வராஜா , வர்த்தக சங்க ஆலோசகரும்பிரபல வர்த்தகருமான  ஏ .ராஜேந்திரன்  , மட்டக்களப்பு வர்த்தக சங்க அங்கத்தவர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பத்மன் மோட்டர்ஸ் நிறுவன குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.