ஏனைய பிரதேசங்களுக்கு இல்லா சிறப்பு மட்டக்களப்புக்கு உள்ளது –நீதிவான் நீதிமன்ற நீதிபதி கணேசராசா

பெண்களைப்போற்றும் சிறப்பு ஏனைய பிரதேசங்களை விட மட்டக்களப்புக்கே உள்ளது என மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தின் பண்டைய கிராமங்களில் ஒன்றாக கருதப்படும் அம்பிலாந்துறையை சேர்ந்த முருகுதயாநிதி எழுதிய “அம்பிலாந்துறை” நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று மாலை அம்பிலாந்துறையில் நடைபெற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எஸ்.செல்வராசா,கலாபூசணம் அரசரெட்னம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய நீதிவான்,

வரலாற்று நூல்கள் வாசிகசாலைகளிலும், கல்வி, இலக்கிய பேராசிரியர்களிடம் மட்டும் தங்கி இருக்காமல் பாடசாலை மட்டங்களிலே உள்ள மாணவர்களிடம் சென்றடைந்தால் மண்ணின் வரலாற்றை மாணவர்கள் அறிவார்கள் அதன் மூலம் தங்களது பெருமையை தக்க வைத்துக்கொள்ள வளப்படுத்தி கொள்வார்கள்.