கிழக்குமாகாண பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் புனித சிசிலியா பெண்கள் கல்லூரி முதல் இடம்

(லியோன்)


கிழக்குமாகாண பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி முதல் இடத்தினை பெற்றுக்கொண்டது .


2016ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண பாடசாலைகள் மட்டத்தில் நடைபெற்ற  கூடைப்பந்தாட்டம் , வலைப்பந்தாட்டம் , உடற்பயிற்சி ஆகிய விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் பங்கு பற்றிய கிழக்குமாகாண பாடசாலைகளில் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி மாணவிகள்  மூன்று போட்டிகளிலும் முதல் இடத்தினை பெற்றுக்கொண்டனர் . 

இந்த விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள்   திருகோணமலை , அம்பாறை ,மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில்  நடைபெற்றது .

கிழக்குமாகாண பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளில் முதல் இடத்தினை பெற்று மட்டக்களப்புக்கும் , பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவிகளை  வரவேற்கும் நிகழ்வு  பாடசாலையில் நடைபெற்றது.  


மாகாணமட்டத்தில் முதல் இடத்தினை பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு இப்பாடசாலை மாணவிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது ,