மட்டு - மெதடிஸ்த மத்திய கல்லூரி ஸ்தாபகர் வில்லியம் ஓல்ட் அடிகளாரின் நினைவு தூபியினை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது ( VIDEO & PHOTOS )

(லியோன்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  10.07.2016 மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு விஜயத்தை மேற்கொண்டார் .

இலங்கையின் முதலாவது ஆங்கில பாடசாலை என பெருமை பெற்றதும் இலங்கையில் 200வருடங்கள்  பழமைவாய்ந்த பாடசாலையான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின்  202வது ஆண்டு நிறைவின் பிரதான நிகழ்வு   10.07.2016   ஞாயிற்றுக்கிழமை  கல்லூரியில்  சிறப்பாக நடைபெற்றது  

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்

மெதடிஸ்த  கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதி வளாகத்தில்  
ஸ்தாபிக்கப்பட்டுள்ள கல்லூரி ஸ்தாபகர் வில்லியம் ஓல்ட் அடிகளாரின்  
 நினைவு தூபியினை திறந்து வைத்தார்

இந்நிகழ்வினை முன்னிட்டு மத்திய கல்லூரியின்  அதிபர் விமல்ராஜ் தலைமையில் கல்லூரியில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது.

இதன் போது கல்லூரி பழைய மாணவ சங்க தலைவரினால் ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்

இந்நிகழ்வில் கிழக்கு மாகான ஆளுநர் ஒஸ்டின் பர்னாந்து , மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ் எம் .சார்ள்ஸ், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாகாணசபை உறுப்பினர்கள் ,கல்லூரி ஆசிரியர்கள் ,மாணவர்கள், கல்லூரி பழைய மாணவர்கள்   என பலர் கலந்துகொண்டனர்