(லியோன்)
மட்டக்களப்பு இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது
.மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய வருடாந்த
திருவிழா கடந்த 01.07.2016 வெள்ளிக்கிழமை
மாலை 05.30 மணியளவில் பங்கு தந்தை அருட்பணி லெஸ்லி ஜெகாந்தன் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .
ஆலய திருவிழா திருப்பலி 10.07.2016 ஞாயிற்றுக்கிழமை
அருட்பணி ஆர் .திருச்செல்வம் அடிகளாரின் தலைமையில் பங்கு தந்தை அருட்பணி லெஸ்லி ஜெகாந்தன்,
அருட்பணி மொறாயஸ் ஆகியோர் இணைந்து
ஒப்புகொடுத்தனர் .
09.07.2016 சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு ஆலயத்தில் விசேட திருப்பலியும் ,திவ்விய நற்கருணை வழிபாடுகளும் , மறைவுரைகளுடன்
தொடர்ந்து திரு இருதயநாதரின்
திரு உருவம் பவனி .நடைபெற்றது .
திருவிழா திருப்பலி 10.07.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு அருட்பணி
ஆர் .திருச்செல்வம் அடிகளாரின் தலைமையில் விசேட
திருநாள் திருப்பலியும் தொடர்ந்து
கொடியிறக்கத்துடன் ஆலய வருடாந்த திருவிழா
நிறைவு பெற்றது .