மட்டக்களப்பு வெபர் விளையாட்டு அரங்கு ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது (VIDEO & PHOTOS)

(லியோன்)

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வெபர் விளையாட்டு  அரங்கு 10.07.2016 சனிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதியினால்    திறந்து வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் கலந்துகொண்ட  உரையாற்றிய விளையாட்டு துறை அமைச்சர் தெரிவிக்கையில் இலங்கை அரசாங்கத்தினால் விளையாட்டுத்துறை அமைச்சு சுமார்   271 மில்லியன் ரூபா நிதியினை  ஒதுக்கீடு செய்யப்பட்டு  இந்த விளையாட்டு அரங்கு நிர்மாணிக்கப்பட்டது

மட்டக்களப்பு பிரதேசத்தில்  மிக முக்கிய குறைபாடாக காணப்பட்ட விளையாட்டு அரங்கு  இன்று திறந்து வைக்கப்பட்டது

தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் விளையாட்டுத்துரையில் பல வீர வீராங்கனைகள் உள்வாங்கி வருகின்ற நிலையில் இந்த விளையாட்டு அரங்கு முக்கிய இடத்தை வகிக்கின்றது .

தேசிய விளையாட்டு விழா செப்டெம்பர் இறுதியிலும் ஒக்டோபர் மாதம் ஆரம்பத்திலும் நடைபெறவுள்ளது  .

அந்த விழாவில் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு வீர வீராங்கனைகள் தமது திறமைகளை காட்டுவதற்கு ஒரு களமாக இந்த விளையாட்டு மைதானம் அமைவதாக விளையாட்டுத்துறை அமைச்சர்  தெரிவித்தார் .

கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ் .தண்டாயுதபாணி கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் ,அமீர் அலி , விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச் .எம் .எம். ஹாரிஸ் , கிழக்குமாகாண முதலமைச்சர் நஸீர்அஹமட் , புனர்வாவு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம் .எஸ்  .எ .எம். ஹிஸ்புல்லாஹா
ஆகியோரின் பங்குபற்றலுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் தாயாசிறி ஜயசேகர அழைப்பின் பேரில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு வெபர் விளையாட்டு கட்டிட தொகுதி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சுபவேளையில் மக்களிடம் கையளிக்கப்பட்டது . 

இடம்பெற்ற நிகழ்வின் போது ஜனாதிபதி கௌரவிக்கப்பட்டு நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது


இந்நிகழ்வில் கிழக்கு மாகான ஆளுநர் ஒஸ்டின் பர்னாந்து , மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ் எம் .சார்ள்ஸ், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாகாணசபை உறுப்பினர்கள் ,கல்லூரி ஆசிரியர்கள் ,மாணவர்கள், கல்லூரி பழைய மாணவர்கள்   என பலர் கலந்துகொண்டனர்