சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் கையெழுத்து போராட்டம்

 (லியோன்)

சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் 12.07.2016 மட்டக்களப்பு நகரில் கையெழுத்து போராட்டத்தினை மேற்கொண்டனர் .
சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர்  ஆர் . கே . இந்திரா நந்த தலைமையில் இடம்பெற்ற  கையெழுத்து பெரும்  போராட்டம் 12.07.2016 செவ்வாய்கிழமை மட்டக்களப்பு பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டது.

கையெழுத்து பெரும் போராட்டத்தின்   போது  தமது சில கோரிக்கைகளை முன்வைத்து இதனை மேற்கொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து புதிய ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்கு வடக்கு கிழக்கு மக்களில் 85 %  ற்கு அதிகமானோர்   புதிய ஜனாதிபதிக்கு வாக்களித்தனர் . 

இப்போதிருக்கும் புதிய ஜனாதிபதி அந்த ஜனாதிபதி தேர்தலின் போது அரசியல் சிறைக் கைதிகளை விடுதலை செய்வதாகவும், காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர்  குறித்த முறையான விசாரணை  நடத்தி அந்த  குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நீதி கிடைக்க செய்வதாகவும் வடக்கு கிழக்கு மக்களுக்கு வாக்குறுதியளித்தார் .

இராணுவ முகாமுகளுக்காக அபகரித்த மக்களின் காணிகளை மீண்டும் பெற்றுக்கொடுப்பதாகவும் , யுத்தத்தினால் அழிந்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதாகவும் நாடாளுமன்ற தேர்தலின் போதும் வாக்குறுதியளித்தார் .

இப்போது புதிய ஜனாதிபதி பதவியேற்று 1 ½  வருடம் கடந்துவிட்டது இதுவரை நீதி கிடைக்கவில்லை .
எனவே இப்போதாவது யுத்த பாதிப்புகளுக்கு இழப்பீடு கொடு , இராணுவத்தை முகாமுக்குள் மட்டுப்படுத்து , சகல கானாமாக்கல்கள் சம்பந்தமான தகவல்களை உடன் வெளிபடுத்து , சகல அரசியல் சிறைக்கைதிகளையும் உடன் விடுதலை செய் என கோரிக்கைகளை முன்வைத்து  இவற்றுக்கான நீதி கிடைக்கவேண்டும் என கோரி  சம உரிமை இயக்கத்தினால்  12.07.2016 போராட்டத்தினை மேற்கொண்டனர் . 

இதன் போது பொதுமக்களிடம் இருந்து கையெழுத்துக்கள் பெறப்பட்டதுடன் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன